என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச நீதிமன்றம்"
- பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
- உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்கிறது.
பல்ஸாதீனம் மீது இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலத்துக்கு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
- இஸ்ரேல் மீது கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் மனித குலத்திற்கு எதிரானது.
- காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரணம் உள்ளது- வழக்கறிஞர்.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுகள் வீசி போர்க்குற்றம் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது. தென்ஆப்பிரிக்கா குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான் கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக எங்களுடைய அலுவலகத்தில் இருந்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். அப்போது ஹமாஸ் அமைப்பு மனிதகுலத்திற்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளோம்.
அதேபோல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. தன்னுடைய அலுவலத்தில் இருந்து நேரில் சென்று விசாரணை நடத்தினோம். அப்போது அதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளார்.
இதனால் ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்.
அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கரிம் கான் கோரிக்கையை ஏற்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்குமா? என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (வயது 48), இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்று இந்தியா தெரிவித்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிற சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.
அதன்படி, குல்பூஷன் ஜாதவ் வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்தியா தரப்பில் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இன்று தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவார் குரேஷி வாதாடுகிறார். நாளை நடைபெறும் விசாரணையின்போது அவர் தனது வாதத்தை முன்வைக்க உள்ளார். நாளை மறுநாள் இந்தியா தரப்பில் பதில் அளிக்கப்படும். 21-ம் தேதி பாகிஸ்தான் தரப்பில் இறுதிக்கட்ட வாதம் முன்வைக்கப்படும்.
வழக்கு விசாரணை சர்வதேச நீதிமன்றத்தின் இணையதளம் மற்றும் ஐநா ஆன்லைன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த கோடைகாலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #KulbhushanJadhav #ICJ
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மே மாதம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
குறிப்பாக ஈரானின் எண்ணெய் வளம் மற்றும் ஆற்றல் துறைகளை குறிவைத்து மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரான் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. அந்நாட்டின் பண மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள தடைகள் சீர்படுத்த முடியாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்றும் ஈரான் தனது மனுவில் கூறியிருக்கிறது. மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. இந்த அம்சங்களை முன்வைத்து இன்று ஈரான் தனது வாதத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் வாதம் இன்று முடிந்ததும், வாஷிங்டன் தரப்பு வழக்கறிஞர்கள் நாளை ஆஜராகி வாதாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #USSanctions #DonaldTrump #ICJ #IranUSLawsuit
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்